Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் தற்போது முடிவுக்கு வந்த நமீபியாவுக்கெதிரான குழு ஏ போட்டியில் நெதர்லாந்து வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நமீபியா, ஜான் நிகொல் லொஃப்டி-ஈட்டனின் 42 (38), ஜான் பிறைலிங்கின் 30 (26), ஜெ.ஜெ. ஸ்மிட்டின் 22 (15), அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எரஸ்மஸ்ஸின் 18 (09) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் பஸ் டீ லீட் 3-0-20-2, லோகன் வான் பீக் 3-0-13-2, அர்யன் டுட் 3-0-13-1, பிரென் கிளாசென் 3-0-25-1, ஸச் லயன்-கசெச்ட் 1-0-6-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து, பஸ் டீ லீட்டின் ஆட்டமிழக்காத 72 (48), கொலின் அக்கர்மன்னின் 32 (28), மைக்கல் லெவிட்டின் 28 (15), அணித்தலைவர் ஸ்கொட் எட்வேட்ஸின் ஆட்டமிழக்காத 18 (09) ஓட்டங்களோடு 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ் 4-0-27-1, ருபென் ட்ரம்பெல்மன் 4-0-30-1, வில்லியம் மைபேர்க் 2-0-12-0, ஜெ.ஜெ. ஸ்மிட் 3-0-25-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக பஸ் டீ லீட் தெரிவானார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago