Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எஃப்.எல்) தொடரில் இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டெட், சிற்றி ஆகியன அணிகள் வெற்றிபெற்றன.
மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கும் நோர்தம்டன் டௌண் அணிக்கும் இடையிலான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் யுனைட்டெட் அணி வெற்றிபெற்றது. அவ்வணி சார்பில் 18ஆவது நிமிடத்தில் மைக்கல் கரிக், 68ஆவது நிமிடத்தில் அன்டெர் ஹெரேரா, 75ஆவது நிமிடத்தில் மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் ஆகியோர் கோல்களைப் பெற்றனர். நோர்தம்டன் சார்பாக 42ஆவது நிமிடத்தில் அலெக்ஸான்டர் றெவெல் கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார்.
மன்செஸ்டர் சிற்றி அணிக்கும் சுவான்சீ சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில், மன்செஸ்டர் சிற்றி அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. மன்செஸ்டர் சிற்றி அணி சார்பாக 49ஆவது நிமிடத்தில காயெல் கிளிச்சியும் 68ஆவது நிமிடத்தில் அலெய்க்ஸ் கர்சியாவும் கோல்களைப் பெற, சுவான்சீ சார்பாகப் பெறப்பட்ட கோலை, 90ஆவது நிமிடத்தில் கில்பி சிகுர்ட்ஸொன் பெற்றுக் கொடுத்தார்.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, நான்காவது சுற்றுக்கான போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியும் மன்செஸ்டர் சிற்றி அணியும், 25ஆம் திகதியன்று ஒன்றையொன்று சந்திக்கவுள்ளன.
தவிர, இடம்பெற்ற ஏனைய போட்டிகளில் கில்லிங்காம் அணியை 5-0 என டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணியும் ஸ்டோக் சிற்றியை 2-1 என ஹள் சிற்றியும் அக்ரிங்டொன் ஸ்டான்லி அணியை 1-0 என வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணியும் கிறிஸ்டல் பலஸ் அணியை 2-0 என சௌதாம்டன் அணியும் குயீன்ஸ் பார்க் றேஞ்சர்ஸ் அணியை 2-1 என சண்டர்லான்ட் அணியும் பிறிஸ்டல் சிற்றியை 2-1 என ஃபுல்ஹாம் அணியும் வெற்றிகொண்டன.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago