Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பூப்பந்தாட்ட வீராங்கனையான சாய்னா நெவால், தனக்கு ஏற்பட்டுள்ள உடற்தகுதிப் பிரச்சினைகள், முழுமையான திறமையை வெளிப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
முதல்நிலை வீராங்கனையாகக் காணப்பட்ட சாய்னா, காயங்கள் காரணமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தாமல் போக, தரப்படுத்தலில் இரண்டாமிடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.
தற்போது போட்டிகளில் பங்குபற்றுகின்ற போதிலும், 100 சதவீத உடற்தகுதி இன்னமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
'உலக சம்பியன்ஷிப்-க்குப் பின்பு, எனது வலது காலில் வலி காணப்பட்டது, ஆகவே, 100 சதவீத உடற்தகுதியை அடைவதற்கு காலமெடுக்கின்றது. அடுத்த வருடம் ஒலிம்பிக் என்பதால், இடைவேளையொன்றை எடுப்பதற்கு நேரம் கிடையாது.
என்னுடைய தரவரிசையைப் பாதுகாப்பதற்காக, சுற்றுத் தொடர்களைத் தவறவிட முடியாது" எனத் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஓகஸ்டில் இடம்பெற்ற உலக சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற சாய்னா, உலக சம்பியன்ஷிப்பில் சம்பியன் பட்டம்வென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமை கிடைக்கக்கூடிய வாய்ப்பிருந்தும், உபாதை காரணமாக முழுமையாகத் திறமையை வெளிப்படுத்தாமல், அப்போட்டியில் அவர் தோல்வியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago