2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணத்தில் ஜேர்மனி, நெதர்லாந்து

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 18 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2026 உலகக் கிண்ணத் தொடருக்கு ஜேர்மனியும், நெதர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

தம் நாட்டில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஸ்லோவாக்கியாவுடனான தகுதிகாண் போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வென்றே உலகக் கிண்ணத் தொடருக்கு ஜேர்மனி தகுதி பெற்றுள்ளது.

ஜேர்மனி சார்பாக லெரோய் சனே இரண்டு கோல்களையும், நிக் வொல்டமேட், சேர்ஜே நர்பி, றிட்லே பகு, அஸன் ஓட்ராகு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை தம நாட்டில் நடைபெற்ற லித்துவேனியாவுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கிண்ணத் தொடருக்கு நெதர்லாந்து தகுதி பெற்றது.

நெதர்லாந்து சார்பாக டிஜ்ஜனி றெஜின்டர்ஸ், கோடி கக்போ, ஸ்கெவி சிமொன்ஸ், டொனைல் மலன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .