2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கான உலகக் கிண்ணத்தில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, அணித்தலைவி பாத்திமா சனா (2), சாடியா இக்பால் (2), டியானா பைக் (4), றமீனா ஷமிம், நஷ்ரா சந்துவிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் ஹர்லீக் டியோலின் 46 (65), றிச்சா கோஷின் ஆட்டமிழக்காத 35 (20), ஜெமிமா றொட்றிகாஸின் 32 (37), பிரதிகா றாவலின் 31 (37), தீப்தி ஷர்மாவின் 25 (33), ஸ்மிருதி மந்தனாவின் 23 (32), ஸ்னே ரானாவின் 20 (33) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 248 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சிட்ரா அமினின் 81 (106), நதாலியா பெரவைஸின் 33 (46) ஓட்டங்களோடு போராடியபோதும் கிரந்தி கெளட் (3), தீப்தி ஷர்மா (3), ஸ்னே ரானாவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே பெற்று 88 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகியாக கிரந்தி கெளட் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .