Shanmugan Murugavel / 2022 மார்ச் 30 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் இவ்வாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கு போலந்து தகுதி பெற்றுள்ளது.
தமது நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற சுவீடனுடனான தகுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே உலகக் கிண்ணத்துக்கு போலந்து தகுதி பெற்றுள்ளது.
போலந்து சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, பியோத்தர் ஸிலென்ஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், தம் நாட்டில் நடைபெற்ற வட மசிடோனியாவுடனான தகுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற போர்த்துக்கல்லும் உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது. போர்த்துக்கல் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ப்ரூனோ பெர்ணாண்டஸ் பெற்றிருந்தார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026