2025 மே 19, திங்கட்கிழமை

உலகக் கிண்ணம்: ஜப்பானிடம் தோற்ற ஜேர்மனி

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 24 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்று மாலை நடைபெற்ற ஜப்பான் உடனான குழு ஈ போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி தோற்றது. 

ஜேர்மனி சார்பாகப் பெறப்பட்ட கோலை இல்கி குன்டோகன் பெற்றதோடு, ஜப்பான் சார்பாக, றிட்சு டோன், தகுமா அஸானோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். 

இதேவேளை, மொராக்கோ, குரோஷியாவுக்கிடையிலான குழு எஃப் போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. 

இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற கொஸ்டா றிக்காவுடனான போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வென்றது. ஸ்பெய்ன் சார்பாக, பெரன் டொரஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், டனி ஒல்மோ, மார்கோ அஸென்ஸியோ, கவி, கார்லோஸ் சொலர், அல்வரோ மொராட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். 

இதேவேளை, இன்று அதிகாலை நடைபெற்ற கனடாவுடனான குழு எஃப் போட்டியில், மிச்சி பச்சுவாய் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X