2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணம்: நடப்புச் சம்பியன்களைத் தாண்டுமா மொரோக்கோ?

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 14 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் மொரோக்கோவை நடப்புச் சம்பியன்களான பிரான்ஸ் எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் பெரும்பாலும் பிரான்ஸே வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றபோதும் இத்தொடரில் பெல்ஜியம், ஸ்பெய்ன், போர்த்துக்கல்லை வீழ்த்திய மொரோக்கோவானது பிரான்ஸுக்கு அதிர்ச்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

தடுப்பரண் போல தம்மைக் கட்டமைத்துள்ள மொரோக்கோவானது இத்தொடரில் எதிரி அணிகள் எக்கோலையும் பெற அனுமதிக்கவில்லை என்ற நிலையில், கோல்களைப் பெறுவதற்கு பிரான்ஸின் நட்சத்திர முன்களவீரர்களான கிலியான் மப்பே, ஒலிவியர் ஜிரூட் ஆகியோர் சவால்களை எதிர்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஹக்கின் ஸியெச், அஷ்ரஃப் ஹக்கிமி மூலமாக அதிரடியாக முன்னேறிச் சென்று மொரோக்கோ தாக்குதல் நடத்தும் என்ற நிலையில், ரஃபேல் வரான், தியோ ஹெர்ணாண்டஸ், ஜுலெஸ் கூன்டேயிடமிருந்து உச்சக்கட்ட அர்ப்பணிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மொரோக்கோ இப்போட்டியில் வெல்லுமிடத்து முதலாவது ஆபிரிக்க அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமென்பதோடு, மறுபக்கமாக பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் சந்தர்ப்பத்தில் பிரேஸிலுக்கு அடுத்ததாக அடுத்தடுத்த உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியாக தமது பெயரை பதிந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X