2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’எங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறினால் சிறப்பு’

Freelancer   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான். இந்தப் போட்டி முடிந்ததும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்திருந்தனர்.

புள்ளிகள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான். 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது அந்த அணி. நடப்பு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என முன்னாள் உலக சம்பியன்களை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான்.

'இந்த போட்டி அற்புதமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. ஆப்கன் அணி அரையிறுதிக்கு முன்னேறினால் சிறப்பாக இருக்கும்' என அந்த அணியின் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .