Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 12 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கிரிக்கெட் அணி சார்பாக 20 ஆண்டுகளாக விளையாடி, 10 ஆண்டுகள் தலைவியாகப் பணியாற்றிய சார்ளட் எட்வேர்ட்ஸை, அணியிலிருந்து நீக்க எடுத்த முடிவு, தனது வாழ்வில் தான் மேற்கொண்ட கடினமான முடிவு என, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பெண்கள் கிரிக்கெட் தலைவியான கிளையர் கொன்னர் தெரிவித்துள்ளார்.
இருவருமே, 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் ஒன்றாக விளையாட ஆரம்பித்து, பின்னர் சிரேஷ்ட அணியிலும் ஒன்றாக விளையாடியிருந்த நிலைமையிலேயே, எட்வேர்ட்ஸை நீக்கும் முடிவை, கொன்னர் எடுக்க வேண்டியிருந்தது.
'நாங்கள் நெருக்கமானவர்கள். அவர் எனக்கு விசேடமானவர், அதேபோல் விளையாட்டுக்கும் விசேடமானவர். எனவே, மிகவும் கடினமானது" என, தனது முடிவு பற்றி கொன்னர் தெரிவித்தார். அணியின் பயிற்றுநர் மார்க் றொபின்சன், புதிய பாதை நோக்கிப் பயணிக்க விரும்பியதாகவும், அதன் காரணமாக, 10 ஆண்டுகள் தலைவியாகப் பணியாற்றிய அவரிடமிருந்து மாற்றம் தேடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அணியில் தொடர்ந்தும் ஆர்வம் காணப்பட்டதாகவும், ஆனால் அணியிலிருந்து நீக்கப்படும் முடிவு எடுக்கப்பட்ட பின்னரே, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை எடுத்ததாகவும், சார்ளட் எட்வேர்ட்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago