2026 ஜனவரி 28, புதன்கிழமை

எல்.பி.எல்லுக்கு சுகாதார அமைச்சு பச்சைக் கொடி

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 05 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) நடைபெறுவதற்கு சுகாதார அமைச்சும், கொவிட்-19 தடுப்பு செயலணியும் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக விளையாட்டமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், குறித்த சமிஞ்ஞை மூலம் சுகாதாரமைச்சின் வழிமுறைகளை பின்பற்றுகையில் புதிய வழமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதுடன், வழமைக்கு நாடு திரும்புகிறது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் நன்றி தெரிவிக்கும் டுவீட்டில் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

தொடரானது உயிரியல் வளையமொன்றுக்குள் ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் நடைபெறும் என நம்பப்படுகின்றது. முன்னதாக தொடரின் இரண்டாவது அரைப்பகுதி கண்டியில் நடைபெறுவதாக இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X