Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 27 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்) கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைக்கிங்ஸின் உரிமங்களை இரத்துச் செய்யவதை இலங்கை கிரிக்கெட் சபை அங்கிகரித்துள்ளது.
கட்டணங்கள், ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு அணிகளையும் நீக்குமாறு எல்.பி.எல் உரிமத்தைக் கொண்டுள்ள ஐ.பி.ஜி பரிந்துரைத்ததையடுத்தே குறித்த அங்கிகாரம் கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயை அடிப்படையாகக் கொண்ட முர்ஃபாட் முஸ்தபாவின் சாஸா குழுவால் கொழும்பும், இந்தியாவின் சச்சின் ஜோஷியின் தெலுங்கு வொரியர்ஸ் நிறுவனத்தால் தம்புள்ள வைக்கிங்கும் உரிமைப்படுத்தப்பட்டிருந்தது. முஸ்தபா கேரளாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதிய இரண்டு உரிமையாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் சபையின் தேவையான அனுமதி கிடைத்தவுடன் உரிமையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. புதிய உரிமையாளர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனப்படுகிறது.
கடந்த பருவகாலத்தில் குறித்த இரண்டு அணிகளுமே லீக் போட்டிகள் முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்றிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago