Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) ஆனது இன்று ஆரம்பித்த நிலையில், ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸை நடப்புச் சம்பியன்களான ஜஃப்னா கிங்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கிளாடியேட்டர்ஸின் அணித்தலைவர் குசல் மென்டிஸ், கிங்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ், 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், டுனித் வெல்லலாகே 30 (20), ஷொய்ப் மலிக் 30 (27), தனஞ்சய டி சில்வா 29 (19) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இமாட் வஸீம் 4-0-22-2, வஹாப் றியாஸ் 4-0-23-2, நுவான் பிரதீப் 4-0-23-2, இஃப்திஹார் அஹ்மட் 1-0-8-2, நுவான் துஷார 3.5-0-31-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 138 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கிளாடியேட்டர்ஸ், 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களையே பெற்று 24 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், குசல் மென்டிஸ் 51 (43) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பினுர பெர்ணாண்டோ 3-1-22-3, விஜயகாந்த் வியாஸ்காந்த் 4-0-20-2, டுனித் வெல்லலாகே 3-0-14-1, ஜேம்ஸ் புல்லர் 4-0-19-1, மகேஷ் தீக்ஷன 4-0-24-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக டுனித் வெல்லலாகே தெரிவானார்.
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
2 hours ago