Shanmugan Murugavel / 2022 மார்ச் 08 , பி.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-5 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் தோற்றது.
டொட்டென்ஹாம் சார்பாக, ஹரி கேன் இரண்டு கோல்களையும், சண் ஹெயுங்க்-மின், சேர்ஜியோ ரிகுலியன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
அந்தவகையில், இப்போட்டி முடிவில் பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 69 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள லிவர்பூல், 63 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள செல்சி 53 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், மூன்று போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள ஆர்சனல் 48 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் காணப்படுகின்றது.
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago