2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

ஏலமெடுக்கப்படாத அஷ்வின்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் சர்வதேச லீக் இருபதுக்கு – 20 தொடரில் இந்தியாவின் இரவிச்சந்திரன் அஷ்வினை எந்த அணியும் ஏலமெடுத்திருக்கவில்லை.

எவ்வாறெனினும் எம்.ஐ எமிரேட்ஸ், டெஸேர்ட் வைப்பர்ஸ் ஆகிய அணிகள் இன்னும் தமது வைல்ட் கார்ட் கைச்சாத்திடல்களை மேற்கொள்ளாத நிலையில் அவற்றினால் கைச்சாத்திடப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

புதன்கிழமை (01) நடைபெற்ற ஏலத்தில் அஷ்வினே தனக்கான தொகையை மிகவும் உயர்வானதாக 120,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக நிர்ணயித்திருந்தார்.

பாகிஸ்தான் வீரர்களின் தடையில்லாச் சான்றிதழ்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இடைநிறுத்தியிருந்தபோதும் பக்கர் ஸமன், நசீம் ஷா, ஹஸன் நவாஸை வைப்பர்ஸ் கைச்சாத்திட்டிருந்தது.

ஏலத்தில் அதிகூடியதாக மேற்கிந்தியத் தீவுகளின் அன்ட்ரே பிளெட்சரை 260,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை எமிரேட்ஸ் கைச்சாத்திட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .