Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சான் சிரோவில் நேற்று அதிகாலை நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான ஏ.சி மிலனுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது.
இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லொட்டரோ மார்டினெஸ் பெற்றார்.
இந்நிலையில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 56 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி உள்ளது. 43 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டர் மிலனும், 40 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றோமாவும், 38 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லேஸியோவும் காணப்படுகின்றன. இதில் லேஸியோ ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
14 minute ago
25 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
1 hours ago
2 hours ago