Shanmugan Murugavel / 2016 மார்ச் 04 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் ஆசியக்கிண்ண போட்டிகளில், நேற்று மிர்பூர் ஷேரே பங்களா தேசிய அரங்கில், இந்தியா, ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கிடையே இடம்பெற்ற போட்டியில் 9 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றி பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் தலைவர் அம்ஜாட் ஜாவீட், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இப்போட்டியில், இந்திய அணி சார்பாக இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்ததோடு பவான் நீகி இந்திய அணி சார்பான அறிமுகத்தை மேற்கொண்டிருந்ததோடு, ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார் ஆகியோரும் அணியில் இடம்பெற்றிருந்தனர்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஷைமான் அன்வர் 43 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார் 2, ஹர்பஜன் சிங், ஹர்டிக் பாண்ட்யா, யுவ்ராஜ் சிங், பவான் நீகி, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், ரோஹித் ஷர்மா 29 பந்துகளில் ஓர் ஆறு ஓட்டம், ஏழு நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 39 ஓட்டங்களையும் யுவ்ராஜ் சிங் ஆட்டமிழக்காமல், 14 பந்துகளில் ஓர் ஆறு ஓட்டம், 4, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 25 ஓட்டங்களையும் பெற்றனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை குவாதீர் அஹ்மட் வீழ்த்தினார்.
போட்டியின் நாயகனாக ரோஹித் ஷர்மா தெரிவானார்.
9 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago