2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ஐக்கிய அரபு அமீரகத்தை வென்றது இலங்கை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 25 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் ஆசியக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற  போட்டியில் இலங்கையும் ஐக்கிய அரபு அமீரகமும் மோதியிருந்த நிலையில், பதின்னான்கு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் அம்ஜாட் கான், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் எனத் தெரிவிதார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக தினேஷ் சந்திமால் 50, டி.எம்.டில்ஷான் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஐக்கிய அரபு அமீரக அணி சார்பாக, அம்ஜாட் கான் 3, மொஹம்மட் நவீட், மொஹம்மட் ஷஷாட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சுவாப்னில் பட்டில் 37 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக, அணித்தலைவர் லசித் மலிங்க 4, நுவான் குலசேகர 3, ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக லசித் மலிங்க தெரிவானார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .