Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
J.A. George / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
ஆண்களுக்கான ஐசிசி T20 உலகக் கிண்ணம் 2022 கிரிக்கெட் போட்டியின் தமிழ்மிரர் நேரடி வலைப்பதிவுக்கு வரவேற்கிறோம். மெல்போர்னுக்கு சற்று வெளியே உள்ள ஜிலாங்கில் உள்ள கார்டினியா பூங்காவில் நமீபியாவை இலங்கை இன்று எதிர்கொள்கிறது.
இந்த இரண்டு அணிகளும் தற்செயலாக, 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியைத் தொடங்குவதற்காக நேருக்கு நேர் மோதின.
அன்று நமீபியா தோற்கடிக்கப்பட்டது. எனினும் அந்தத் தோல்வியானது இன்று தனது அணியின் மனதில் இருந்து வெகு தொலைவில் உள்ளதாக அணித்தலைவர் ஹெர்ஹார்ட் எராஸ்மஸ் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கை அணி 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து நபீபியாவிடம் 55 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது
15.2 ஓவர்களுக்கு 92 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கை அணி 9ஆவது விக்கெட்டை இழந்தது.
14.2 ஓவர்களுக்கு 88 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கை அணி 8ஆவது விக்கெட்டை இழந்தது
13.5 ஓவர்களுக்கு 88 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கை அணி 7 ஆவது விக்கெட்டை இழந்தது
12.3 ஓவர்களுக்கு 80 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது இலங்கை அணி
11 ஓவர்களுக்கு 5விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களை பெற்றுள்ளது இலங்கை அணி
நான்காவது விக்கெட்டையும் பறிகொடுத்தது இலங்கை அணி.
04 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது
ஹெட்ரிக்கை தவறவிட்டது நமீபியா
மற்றுமொரு விக்கெட்டை பறிகொடுத்தது இல்லை
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள்
இலங்கை 3.2 ஓவரில் தனது 2 ஆவது விக்கெட்டை இழந்தது.
வைஸுக்கு ஆரம்ப விக்கெட்!
குசல் மெண்டிஸ், டேவிட் வைஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஜேன் கிரீனிடம் பந்தை பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்களை பெற்றது
இலங்கை அணிக்கு 164 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நமீபியா
20 ஓவர் நிறைவில் நமீபியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுள்ளது.
19 ஓவருக்கு நமீபியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றுள்ளது.
17 ஓவர்கள் நிறைவில் நமீபியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றுள்ளது.
17 ஓவர்கள் நிறைவில் நமீபியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்களை பெற்றுள்ளது.
14.2 ஓவர்கள் நிறைவில் நமீபியா அணி 93 ஓட்டங்களுக்கு தனது ஆறாவது விக்கெட்டை இழந்தது.
91 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் நமீபியா அணி ஐந்தாவது விக்கெட்டையும் பிடிகொடுப்புக்கு இழந்தது.
நமீபியா அணி 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.
நமீபியா அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மூன்றாவது விக்கெட்டையும் தட்டித்தூக்கியது இலங்கை: நிகோல் லோஃப்டி-ஈட்டன் 20 ஓட்டங்களுக்கு இரண்டு சிக்ஸர்களை அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றியது இலங்கை
திவான் லா காக் வான்வழியாக பந்தினை அடித்து தூக்க முயற்சிக்கிறார். ஆனால் தசுன் ஷனக எளிதான பிடியெடுப்பினை மேற்கொண்டார். பிரமோத் மதுஷானும் தனது முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டைப் பெற்றார்.
டி லா காக் சி - ஷனக பி மதுஷன் 9(9)
நமீபியா 3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது.
முதல் விக்கெட்டை இழந்தது நமீபியா
முதல் ஓவரில் நமீபியா 5/0.
நமீபியா: ஸ்டீபன் பார்ட், டேவிட் வைஸ், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ஜேஜே ஸ்மித், ஜான் ஃப்ரைலின்க், ஜேன் கிரீன், திவான் லா காக், மைக்கேல் வான் லிங்கன், பெர்னார்ட் ஷால்ட்ஸ் மற்றும் பென் ஷிகோங்கோ
இலங்கை அணி: பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக , வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷன் மற்றும் மஹீஷ் தீக்ஷன
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025