Shanmugan Murugavel / 2016 மே 31 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரிஸில் இடம்பெற்ற சம்பவமொன்றில் பங்கெடுத்தமையையடுத்து ஐவரிகோஸ்ட் சர்வதேச அணியின் வீரரான சேரிஜ் ஓரியே திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்ப் எலைய்ஸஸ் பகுதியிலிலுள்ள இரவு விடுதியொன்றிலிருந்து திங்கட்கிழமை (30) அதிகாலை வெளியேறியபோதே மேற்கூறப்பட்ட சம்பவம் இடம்பெற்றதாகவும், பொலிஸாருடன் ஒரியே வாக்குவாதப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
23 வயதான மேற்படி நபர் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணிக்காகவும் விளையாடுகின்ற நிலையில், எந்தவொரு கருத்தையும் வெளியிடுவதற்கு முதல் மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதாக பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில், சமூக வலைத்தளமான பெரிஸ்கோப்பில் வெளியிட்ட காணொளியொன்றில் சக பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வீரர்களான ஸல்டான் இப்ராஹிமோவிக்கையும் அஞ்செல் டி மரியாவை அவமானப்படுத்தியமைக்காக அவ்வணியின் பயிற்சியாளர் லோரண்ட் பிளாங்கால் குறிப்பிட்ட காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago