Shanmugan Murugavel / 2025 மார்ச் 18 , பி.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) முதல் இரண்டு பருவகாலங்களிலும் தகுதிகாண் போட்டி வரை முன்னேறியிருந்தபோதும் கடந்த பருவகாலத்தில் ஏழாமிடத்தையே பெற்றிருந்தது.
அணித்தலைவர் லோகேஷ் ராகுலை அணியிலிருந்து விடுவித்த லக்னோ, றிஷப் பண்டைக் ஏலத்திலெடுத்து அணித்தலைவராக்கியிருக்கிறமையானது அவ்வணிக்கு நிச்சயம் பலத்தை வழங்கும்.
பண்டோடு, தக்க வைக்கப்பட்ட நிக்கலஸ் பூரான், அயுஷ் படோனி, ஏலமெடுக்கப்பட்ட ஷபாஸ் அஹ்மட், டேவிட் மில்லரென மத்திய வரிசை பலமானதாகக் காணப்படுகிறது.
ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக ஏலமெடுக்கப்பட்டவர்களில் மிற்செல் மார்ஷ், ஏய்டன் மார்க்ரம் ஆகியோர் களமிறங்குவார்களென எதிர்பார்க்கப்படுவதோடு, மத்தியூ பிரட்ஸ்கேயும் குழாமில் காணப்படுகின்றனர்.
சுழற்பந்துவீச்சுப் பக்கமும் ரவி பிஷ்னோய், ஷபாஸ் அஹ்மட், மணிமாறன் சித்தார்த் காணப்படுகின்ற நிலையில் பலமாய் இருக்கின்றது.
மாயங்க் யாதவ், மொஷின் கான், ஆவேஷ் கான் என பலமான வேகப்பந்துவீச்சு வரிசை காணப்படுகின்றபோதும் காயம் காரணமாக அண்மைய போட்டிகளில் இவர்கள் விளையாடததே பிரச்சினைக்குரியதாகக் காணப்படுகின்றது.
கடந்த பருவகாலத்தில் குயின்டன் டி கொக், தீபக் ஹூடா, குருனால் பாண்டியா, மார்க்கஸ் ஸ்டொய்னிஸை இழந்தமை பின்னடைவாகக் காணப்படுகின்றது.
எதிர்பார்க்கப்படும் பதினொருவர் அணி: ஏய்டன் மார்க்ரம், மிற்செல் மார்ஷ், நிக்கலஸ் பூரான், றிஷப் பண்ட் (அணித்தலைவர்), அயுஷ் படோனி, டேவிட் மில்லர், ஷபாஸ் அஹ்மட், அப்துல் சமட், ஆகாஷ் டீப், ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங்
தாக்கம் செலுத்தும் வீரர்கள்: மணிமாறன் சித்தார்த், ராஜவர்தன் ஹங்க்ரேக்கர், பிறின்ஸ் யாதவ்
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago