2025 மே 01, வியாழக்கிழமை

ஐ.பி.எல்: மும்பையிடம் 116 ஓட்டங்களுக்குள் சுருண்ட கொல்கத்தா

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 31 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் இன்று நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸுக்கெதிரான போட்டியில் 116 ஓட்டங்களுக்குள் கொல்கத்தா நைட் றைடர்ஸ் சுருண்டுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பையின் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, ட்ரெண்ட் போல்ட், தீபக் சஹர் (2), அறிமுக வீரர் அஷ்வனி குமார் (4), பாண்டியா, விக்னேஷ் புதூர், மிற்செல் சான்ட்னெரிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், அங்கிரிஷ் ரகுவன்ஷி 26 (16), ரமன்டீப் சிங் 22 (12), மனிஷ் பாண்டே 19 (14), ரிங்கு சிங் 17 (14) ஓட்டங்களைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .