Shanmugan Murugavel / 2022 மே 02 , பி.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், மும்பையில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ராஜஸ்தான், அணித்தலைவர் சஞ்சு சாம்ஸனின் 54 (49), ஷிம்ரோன் ஹெட்மயரின் ஆட்டமிழக்காத 27 (13) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 4-1-24-1, அங்குல் றோய் 4-0-28-1, சுனில் நரைன் 4-0-19-0, ஷிவம் மவி 4-0-33-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 153 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, ஆரம்பத்திலேயே குல்டீப் சென், பிரசீத் கிருஷ்ணாவிடம் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களைப் பறிகொடுத்தது. எனினும், அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் 34 (32), நிதிஷ் ரானாவின் ஆட்டமிழக்காத 48 (37), ரிங்கு சிங்கின் ஆட்டமிழக்காத 42 (23) ஓட்டங்களோடு 19.1 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4-0-25-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக ரிங்கு சிங்க் தெரிவானார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026