2023 ஜூன் 07, புதன்கிழமை

ஐ.பி.எல்: டெல்லியைத் தோற்கடித்த சென்னை

Shanmugan Murugavel   / 2022 மே 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை, டெவோன் கொன்வேயின் 87 (49), ருத்துராஜ் கைகவாட்டின் 41 (33), ஷிவம் டுபேயின் 32 (19), மகேந்திர சிங் டோணியின் ஆட்டமிழக்காத 21 (08) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், கலீல் அஹ்மட் 4-0-28-2, அக்ஸர் பட்டேல் 3-0-23-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு209 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, சிமர்ஜீட் சிங்க் (2), மகேஷ் தீக்‌ஷன, மொயின் அலி (3), முகேஷ் செளத்ரி (2), டுவைன் பிராவோவிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களையே பெற்று 91 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக டெவோன் கொன்வே தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .