2026 மே 19, செவ்வாய்க்கிழமை

ஐ.பி.எல்: தகுதி பெற்ற குஜராத், ஹைதரபாத்

Shanmugan Murugavel   / 2026 மே 19 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு குஜராத் டைட்டான்ஸ், சண்றைசர்ஸ் ஹைதரபாத் ஆகியன தகுதி பெற்றுள்ளன.

சென்னையில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றமையைத் தொடர்ந்தே குஜராத்தும் ஹைதரபாத்தும் தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளன.

தலா 16 புள்ளிகளுடன் இரண்டாம், மூன்றாமிடங்களில் குஜராத், ஹைதரபாத்தும் காணப்படுகின்ற நிலையில், ராஜஸ்தான் மாத்திரமே இனி 16 புள்ளிகளை அடைய முடியும் என்ற நிலையிலேயே முதல் நான்கு இடங்களுக்குள் இருப்பதை உறுதி செய்து குஜராத்தும் ஹைதரபாத்தும் தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X