2026 மே 19, செவ்வாய்க்கிழமை

ஈரானின் அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் பகிர்ந்தது பாகிஸ்தான்

Freelancer   / 2026 மே 19 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆசியா​வில் நடந்து வரும் போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக, ஈரானின் திருத்தப்பட்ட புதிய அமை​தித் திட்​டம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது தற்​காலிகப் போர்​நிறுத்​தம் அமலில் உள்ள நிலை​யில், இரு நாடு​களுக்​கும் இடையே முக்​கிய தூத​ராகச் செயல்​பட்டு வரும் பாகிஸ்​தான் மூல​மாக இந்​தத் திட்​டம் பகிரப்​பட்​டுள்​ள​தாக பாகிஸ்​தான் அரசு வட்​டாரங்​களை மேற்​கோள் காட்டி ரொய்ட்​டர்ஸ் செய்தி நிறு​வனம் திங்​கள்​கிழமை தெரி​வித்​துள்​ளது.

போரை முடிவுக்​குக் கொண்டு வர ஈரான் விருப்​பம் தெரி​வித்​துள்ள நிலை​யில், அமெரிக்கா அனுப்​பிய புதிய அமை​தித் திட்​டத்​திற்கு ஈரான் பதிலளித்​துள்​ளது. அமெரிக்​கா​வின் கோரிக்​கைகள் மிக அதி​க​மாக இருப்​ப​தாக ஈரானிய ஊடகங்​கள் தெரி​வித்த போதி​லும், இரு தரப்​பும் தொடர்ந்து தகவல்​களைப் பரி​மாறி வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. அமெரிக்கா விதித்​துள்ள நிபந்​தனை​களில், ஈரானுக்கு போர்க்​கால இழப்​பீடு எது​வும் வழங்​கப்பட மாட்​டாது மற்​றும் அந்​நாடு ஒரே ஒரு அணுசக்தி நிலை​யத்தை மட்​டுமே கொண்​டிருக்க அனு​ம​திக்​கப்​படும் என்​பவை அதில் முக்​கிய​மானது என்று ஈரானின் பார்ஸ் செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X