Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், உலகின் 14ஆம் நிலை வீரரான பிரான்ஸின் கயேல் மொன்பில்ஸை தோற்கடித்து தனது ஒன்பதாவது மொன்டே கார்லோ மாஸ்டேர்ஸ் பட்டத்தை கைப்பற்றினார்.
தொழில்முறை டென்னிஸ் வீரர்களின் கூட்டமைப்பு உலக தொடர் போட்டிகளில், மேற்படி போட்டியுடன் சேர்த்து 100ஆவது இறுதிப் போட்டியில் விளையாடிய ரஃபேல் நடால், 7-5, 5-7, 6-0 என்ற செட் கணக்கில் கயேல் மொன்பில்ஸை தோற்கடித்து, இறுதிப் போட்டிகளில் தனது 68ஆவது வெற்றியைப் பெற்றார்.
இது மிக முக்கியமான வாரம் எனத் தெரிவித்த 29 வயதான ரஃபேல் நடால், வெற்றி, நான் சிறந்தவன் என்று உறுதிப்படுத்திறது என அவர் மேலும் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு மூன்று பட்டங்களையே வென்ற ரஃபேல் நடாலுக்கு, 2016ஆம் ஆண்டில் இது முதலாவது பட்டமாகும். கடந்த 13 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் களிமண் தரையில் ரஃபேல் நடால் பட்டங்களை வென்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .