Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 10 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஒப்பந்தம் செய்யப்பட்ட 2025-26 வீரர்களுக்கான பட்டியலில் வேகப்பந்துவீச்சாளர்கள் மொஹமட் ஷமி, முகேஷ் குமார் மற்றும் துடுப்பாட்டவீரர் சஃப்ராஸ் கான் ஆகியோர் இடம்பெறவில்லை.
முன்னாள் தலைவர்களான விராட் கோலி, றோஹித் ஷர்மா ஆகியோர் பி பிரிவுக்கு கீழிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஷுப்மன் கில், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, சகலதுறைவீரர் இரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த முறை இருந்த ஏ+ பிரிவு இம்முறை உள்ளடக்கப்படவில்லை. அதில் கோலி, றோஹித், பும்ரா, ஜடேஜா காணப்பட்டிருந்தனர்.
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் சூரியகுமார் யாதவ், றிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், யஷஸ்வி ஜைஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ் ஆகியோர் பி பிரிவில் காணப்படுகின்றனர். இதில் கடந்த முறை சி பிரிவிலிருந்து பிக்கு சுந்தர் முன்னேறியுள்ளார்.
கடந்த முறை பி பிரிவிலிருந்து அக்ஸர் பட்டேல் சி பிரிவுக்கு கீழிறக்கப்பட்டுள்ளார்.
சியில் திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் டுபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்டீப் சிங், பிரசீத் கிருஷ்ணா, ஆகாஷ் டீப், துருவ் ஜுரேல், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, சாய் சுதர்ஷன், ரவி பிஷ்னோய், ருத்துராஜ் கைகவாட் ஆகியோர் காணப்படுகின்றனர்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago