Shanmugan Murugavel / 2021 ஜூலை 14 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து உலகின் ஒன்பதாம் நிலை டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரரும் விலகியுள்ளார்.
புற்தரை பருவகாலத்தின்போது முழங்கால் காயம் ஒன்று தனக்கு ஏற்பட்டதாக சுவிற்ஸர்லாந்தின் பெடரர் தெரிவித்துள்ளார்.
40 வயதாகும் பெடரர் கடந்தாண்டு இரண்டு முழங்கால் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு ஓராண்டுக்கு மேலாக அதிலிருந்து மீண்டு வந்து இவ்வாண்டு மார்ச் மாதத்திலேயே போட்டிகளுக்குத் திரும்பியிருந்தார்.
பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் இரட்டையர் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த பெடரர், தனிநபர் போட்டிகளில் 2012ஆம் ஆண்டு இலண்டனில் வெள்ளிப் பதக்கத்தையே பெற்றிருந்தார்.
இதேவேளை, பெடரர் தவிர, உலகின் மூன்றாம் நிலை வீரரான ரஃபேல் நடால், ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோரும் ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago