Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 25 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் றியோ டி ஜனிரோவில் இவ்வாண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், பிரேஸில் அணியின் தலைவராக, கால்பந்தாட்ட நட்சத்திரமான நேமர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரேஸிலில் நிலவும் குழப்பமான அரசியல் நிலைமை, பொருளாதார நெருக்கடி, சீகா வைரஸ் தொடர்பான அச்சம், ஏற்பாடுகள் தொடர்பாக இன்னமும் காணப்படும் சந்தேகங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், இன்னமும் 101 நாட்கள் மாத்திரமே உள்ள ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவருகின்றன.
இந்நிலையிலேயே, இம்முறை இடம்பெறவுள்ள போட்டிகளில் 30 பதக்கங்களை வெல்ல எதிர்பார்த்துள்ள பிரேஸில் அணியின் தலைவராக நேமர் செயற்படவுள்ளார்.
உலகில் மிகவும் வெற்றிகரமான கால்பந்தாட்டத் தேசங்களில் ஒன்றான பிரேஸில், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை தங்கப் பதக்கத்தை வென்றதில்லை. கடந்தமுறை, மெக்ஸிக்கோவிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையிலேயே, நேமர் விளையாடும் பார்சிலோனா அணியுடன் பேரம்பேசி, ஒலிம்பிக் போட்டிகளில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பை, பிரேஸில் பெற்றுள்ளது. எனினும், ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள கோபா அமெரிக்கா கிண்ணத்தில், நேமருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago