Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னாள் பின்களவீரரான பற்றிஸ் எவ்ரா ஒய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்னாள் பின்களவீரரான 38 வயதான எவ்ரா, பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவிலிருந்து 2006ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைட்டெட்டால் ஒப்பந்தம் செய்யப்பட்டு 379 போட்டிகளில் விளையாடி, ஐந்து பிறீமியர் லீக் பட்டங்களையும், 2007-08 சம்பியன்ஸ் லீக் பட்டத்தையும், இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத்தை மூன்று தடவைகளும் வென்றிருந்தார்.
மன்செஸ்டர் யுனைட்டெட்டிலிருந்து 2014ஆம் ஆண்டு விலகி இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸுக்குச் சென்றிருந்த எவ்ரா, 2017ஆம் ஆண்டு வரையில் அங்கு விளையாடி மூன்று சீரி ஏ பட்டங்களையும், இரண்டு தடவைகள் கோப்பா இத்தாலியா கிண்ணத் தொடரையும் வென்றிருந்தார்.
பின்னர் 2017ஆம் ஆண்டில் பிரெஞ்சு லீக் 1 கழகமான மர்ஸெய்யில் விளையாடியிருந்த எவ்ரா, கடந்தாண்டு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுக்காக விளையாடியிருந்த நிலையில், கடந்தாண்டு மே மாதத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுக்காக அவர் விளையாடியதே அவரது கடைசிப் போட்டி ஆகும்.
இதேவேளை, பிரான்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணிக்காக 2010, 2014 உலகக் கிண்ணங்கள் உள்ளடங்கலாக 2004ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை 81 போட்டிகளில் எவ்ரா விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
28 minute ago