Shanmugan Murugavel / 2024 நவம்பர் 13 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் மொஹமட் நபி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முடிவிலேயே இக்கருத்துக்களை சகலதுறைவீரரான நபி வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற 39 வயதான நபி தொடர்ந்தும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
இதுவரையில் 167 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3,600 ஓட்டங்களைப் பெற்ற நபி, 172 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026