2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஓய்வு பெற்றார் நுவான் குலசேகர

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் குலசேகர ஓய்வுபெற்றுள்ளார்.

தனது 21ஆவது வயதில் 2003ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட தற்போது 37 வயதாகும் நுவான் குலசேகர 184 போட்டிகளில் விளையாடி 199 விக்கெட்டுகளைக் கைப்பற்றியபோதும் இறுதியாக 2017ஆம் ஆண்டே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதலாமிடத்துக்கு நுவான் குலசேகர முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 58 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்த நுவான் குலசேகர 66 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்ததுடன், உலக இருபதுக்கு – 20ஐ 2014ஆம் ஆண்டு வென்ற இலங்கையணிலும் இடம்பெற்றிருந்தார். அத்தொடரில் ஆறு போட்டிகளில், ஓவருக்கு 6.42 என்ற ஓட்டங்கள் என்ற வகையிலேயே ஓட்டங்களை வழங்கியிருந்த நுவான் குலசேகர, இந்தியாவுக்கெதிரான இறுதிப் போட்டியில், தனது நான்கு ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் 2005ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்டிருந்த நுவான் குலசேகர 21 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளைக் கைப்பற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .