Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Mayu / 2024 ஜூலை 07 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. அவர் களத்திற்குள் வருகை தரும் போதே ரசிகர்கள் கூச்சலிட்டு உட்சாகமடைவாரகள். இவர் 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
இந்நிலையில், WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற 'மணி இன் தி பேங்க்' (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
47 வயதாகும் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர்.
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெசில்மேனியா 41-ல் தான் போட்டியிட போவதாகவும் இந்த போட்டிகளோடு WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று ஜான் சீனா அறிவித்தார். இதன்படி 2025-ம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வு பெற உள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago