Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களுக்கு சேவை செய்து, உதவி செய்து ஓய்வு பெற்றவனாக நான் மகிழ்ச்சியடைவதாக தனது இறுதி மோதலில் வென்ற பின் மனி பக்கையாவோ தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கையின் இறுதி மோதல் என மனி பக்கையோவால் கூறப்பட்ட மோதலில் ஏகமனதாக திமோதி பிராட்லியை மனி பக்கையாவோ தோற்கடித்திருந்தார்.
லாஸ் வேகாசில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் 116க்கு 110 என்ற புள்ளிகள் அடிப்படையில் மனி பக்கையாவோ தோற்கடித்ததாக மூன்று நடுவர்களும் ஏகமனதாக புள்ளியிட்டிருந்தனர்.
37 வயதான பிலிப்பைன்ஸின் மனி பக்கையாவோயுக்கும் 32 வயதான அமெரிக்கரான திமோதி பிராட்லிக்குமிடையிலான 63.5 கிலோகிராமுக்கு 67 கிலோகிராமுக்கும் இடைப்பட்ட மேற்படி மூன்றாவது போட்டியின் ஏழாவது மற்றும் ஒன்பதாவது சுற்றுக்களில் திமோதி பிராட்லியையை மனி பக்கையாவோ வீழ்த்தியிருந்தார்.
தனது வாழ்நாளில் 66 போட்டிகளில் பங்கேற்ற மனி பக்கையாவோ, அதில், ஆறு வகையான எடைப்பிரிவுகளில் உலகப் பட்டங்களை வென்றுள்ளார்.
தனது குடும்பத்துக்கு உறுதிமொழியொன்றை வழங்கியதாகத் தெரிவித்த மனி பக்கையாவோ, மேற்படி போட்டிக்கு முன்னர் கருத்து தெரிவிக்கையில், பிலிப்பைன்ஸில் தனது அரசியல் வாழ்க்கையில் கவனஞ் செலுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.
37 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago