Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க றக்பி அணியின் தலைவர் ஜுவான் டி வில்லியர்ஸ், சர்வதேச றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். அவருக்கு ஏற்பட்ட உபாதையைத் தொடர்ந்தே, அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.
சமோவா அணிக்கெதிராக சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் காயமடைந்த டி வில்லியர்ஸ், உலகக் கிண்ணம் முழுவதிலும் பங்குபெற முடியாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே தனது ஓய்வை அவர் அறிவித்துள்ளாhர்.
சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் காயமடைந்து வெளியேறிய போது, தனது இறுதி சர்வதேச றக்பி போட்டியில் விளையாடியிருப்பதைத் தான் உணர்ந்ததாகத் தெரிவித்த டி வில்லியர்ஸ், காயங்களென்பவை றக்பி விளையாட்டின் ஓர் அங்கம் எனவும், அவற்றில் ஏராளமான காயங்களைத் தானும் சந்தித்திருந்தாதகவும் தெரிவித்தார்.
ஓய்வுபெறுவதை 'மிகவும் கவலையானது" எனக் குறிப்பிட்ட டி வில்லியர்ஸ், 'ஆனால், வாழ்க்கை தொடர்ந்து செல்லும்" எனக் குறிப்பிட்டார்.
தென்னாபிரிக்கா சார்பாக 109 போட்டிகளில் விளையாடிய டி வில்லியர்ஸ், அவ்வணி சார்பாக நான்காவது அதிக போட்டிகளில் விளையாடியவராகக் காணப்படுகிறார்.
தனது முதலாவது போட்டியில் முழங்கால் உபாதையைச் சந்தித்திருந்த டி வில்லியர்ஸ், 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் முதற்போட்டியிலேயே காயமடைந்து, அத்தொடரில் மேலதிகமாகப் பங்குபெறவில்லை என்பதோடு, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திலும் விலா என்பு முறிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago