Shanmugan Murugavel / 2015 நவம்பர் 11 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவருமான யுனிஸ் கான், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக இன்று இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் பின்னரே அவர் ஓய்வுபெற்றுள்ளார்.
37 வயதான யுனிஸ் கான், இவ்வாண்டு உலகக் கிண்ணத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும், இங்கிலாந்து அணிக்கெதிராக இன்று ஆரம்பித்த தொடருக்காக அவர் சேர்க்கப்பட்டிருந்தார்.
நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடருக்கான குழாமில் அவர் இடம்பெற்றிருந்த போதிலும், முதலாவது போட்டியைத் தொடர்ந்தே ஓய்வுபெற்றுள்ளார்.
இன்றைய போட்டிக்கு முன்பதாக, 264 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர், 254 இனிங்ஸ்களில் 7 சதங்கள், 48 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 31.34 என்ற சராசரியில் 7,240 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
ஏற்கெனவே இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள யுனிஸ் கான், தன்னால் முடிந்தளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026