2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட மக்கில்

Shanmugan Murugavel   / 2021 மே 05 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த மாதம் கடத்தெலனக் கூறப்படுவதில், அந்நாட்டின் முன்னாள் வீரரான ஸ்டூவர்ட் மக்கில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக, பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் (பி.பி.சி) இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வார காலமாக இடம்பெற்ற விசாரணையின் முடிவாகவே, சிட்னியில் நேற்று நடைபெற்ற தேடுதல்களையடுத்து குறித்த கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

கிரேமொர்னே புறநகரில் இரவு மக்கில்லுடன் முரண்பட்ட ஆண்கள் குழுவொன்று, அவரை காருக்குள் உட்தள்ளியதாக பொலிஸார் கூறியுள்ளார். பின்னர், புறநகர்ப் பகுதியான பிறின்கெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட மக்கில், துப்பாக்கி முனையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மக்கில் விடுவிக்கப்பட்டுள்ளார். தென் மேற்கு புறநகரான பெல்மோரேக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் செல்ல அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .