Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 09 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான தலைவராக வலம் வந்த மெக் லானிங் தனது ஓய்வு முடிவை தீடிரென அறிவித்துள்ளார். 31 வயதான அவர், அவுஸ்திரேலிய அணிக்க்காக 182 சர்வதேச போட்டிகளில் தலைவராக செயல்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு தனது 18 வயதில் அவுஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான மெக் லானிங், 13 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வை அறிவித்துள்ளார்.
2014ல் அவுஸ்திரேலியாவை முதன்முதலில் வழிநடத்திய லானிங், பெண்கள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான தலைவராக வலம் வருகிறார். 78 ஒருநாள் போட்டிகளில் 69 வெற்றிகள், 100 டி20 போட்டிகளில் 76 வெற்றிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி என அவுஸ்திரேயாவை வெற்றிகராமாக வழிநடத்தி உள்ளார்.
மேலும் அவர் தனது தலைமைத்துவத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு நான்கு டி20 உலகக்கோப்பைகள், ஒரு 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் கூறுகையில், "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவது என்பது கடினமான முடிவு. ஆனால், இப்போதுதான் எனக்கு சரியான நேரம் என்று உணர்கிறேன். 13 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அனுபவித்த நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி. அதனால் ஓய்வு பெற இப்போது சரியான நேரம் என்று எனக்குத் தெரியும். என்னால் சாதிக்க முடிந்ததைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
12 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago