Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில், றோமானிய, கனடா அணிகளுக்கிடையிலான போட்டி, மிகுந்த சுவாரசியமானதாக அமைந்ததோடு, றோமானிய அணிக்கு வெற்றியை வழங்குவதாகவும் அமைந்தது.
இடம்பெற்ற மற்றைய போட்டியில், உருகுவே அணியை எதிர்கொண்ட பிஜி, இலகுவான வெற்றியைப் பெற்றது.
றோமானிய, கனட அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆரம்பத்திலிருந்து ஆதிக்கத்தை வெளிப்படுத்திய கனடா அணி, முதற்பாதி முடிவில் 8-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த கனட அணி, 52ஆவது நிமிட நிறையில் 15-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றுக் காணப்பட்டதோடு, வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அதன் பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய றோமானியா, இறுதிவரை போராடி 17-15 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
பிஜி, உருகுவே அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆரம்பத்தில் ஓரளவு போட்டித்தன்மை நிலவி, பிஜி 12-10 என்ற முன்னிலையை வகித்தாலும், அதன் பின்னர் பிஜி அணி தொடர்ச்சியான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, முதற்பாதி முடிவில் 26-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன் பின்னரும் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய பிஜி அணி, 47-15 என்ற புள்ளிகள் கணக்கில் இப்போட்டியில் இலகுவாக வெற்றிபெற்றது.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago