Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கவுன்சிலால் 13 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு சேவைகள் கராத்தே சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகள் சமீபத்தில் பனாகொடையில் உள்ள இலங்கை இராணுவ உள்ளக அரங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
இந்தப் போட்டியில் இலங்கை விமானப்படை பெண்கள் கராத்தே அணி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர். இது முப்படைகளுக்குள் வளர்ந்து வரும் போட்டித்தன்மையையும் கராத்தேவின் உயர் தரத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
அதேபோல் ஆண்கள் பிரிவில் விமானப்படை ஆண்கள் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன் ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தை இலங்கை இராணுவ அணியினர் பெற்றுக்கொண்டனர்.
இந்தப் போட்டியின் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் மேஜர் ஜெனரல் ஆர்.டி. சலே அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார், மேலும் விமானப்படை கராத்தே பிரிவின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் வஜிர சேனாதீர, விமானப்படை கராத்தேவின் செயலாளர் குரூப் கேப்டன் அமரசிங்க மற்றும் பல முப்படை மூத்த அதிகாரிகள் மற்றும் முப்படை வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025