2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

கரீபியன் பிறீமியர் லீக் தொடரின் 6 போட்டிகள் அமெரிக்காவில்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரீபியன் பிறீமியர் லீக் தொடரின் ஆறு போட்டிகள், இம்முறை அமெரிக்காவில் இடம்பெறவுள்ளதாக, அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையால் நடாத்தப்படும் இத்தொடர், கரீபியன் தீவுகளான ஜமைக்கா, சென். கிற்ஸ், சென். லூசியா, ட்ரினிடாட், பார்படோஸ், கயானா ஆகிய தீவுகளில் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில், இவ்வாண்டு இடம்பெறவுள்ள போட்டிகளில் ஆறு, புளோரிடாவின் லோடெர்ஹில்லிலுள்ள மத்திய புரோவார்ட் பிராந்திய மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போட்டிகள், ஜூலை 17ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .