2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

கலட்டசரேயிடம் தோற்ற லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 01 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் தொடரில், துருக்கியக் கால்பந்தாட்டக் கழகமான கலட்டசரேயின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தோற்றது.

கலட்டசரே சார்பாகப் பெறப்பட்ட கோலை விக்டர் ஒஸிம்ஹென் பெற்றிருந்தார்.

இந்நிலையில் நோர்வேக் கழகமான பொடோ கிளிம்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது.

டொட்டென்ஹாம் சார்பாக மிக்கி வான் டி வென் ஒரு கோலைப் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. பொடோ கிளிம்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜென்ஸ் பீற்றர் ஹேக் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .