Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோல்ஃப் ஜாம்பவான டைகர் வூட்ஸ், அவரது கரானது வீதியிலிருந்து விலகி மலைப்பகுதியொன்றிலிருந்டு உருண்டு வீழ்ந்த நிலையில் மோசமான கால் காயங்களுடன் ஐக்கிய அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸிஸ் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார் சிதைவுகளிலிருந்து வூட்ஸை மீட்பு அணிகள் இழுத்தெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காயங்கள் உயிருக்கு ஆபத்தானவையல்ல என நம்பப்படுவதாக லொஸ் ஏஞ்சலஸ் கவுண்டி ஷெரிஃப் அலெக்ஸ் வில்லனுவெவா செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளதுடன், வூட்ஸ் நினைவுடன் இருந்ததாகவும், மீட்பு அணி சென்றபோது தொடர்புகொள்ளக்கூடியவாறு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் அவசரசேவைப் பணியாளர்களால் வூட்ஸ் பரிசோதிக்கப்பட்டபோது வூட்ஸ் குடிபோதையில் இருந்ததுக்கான ஆதாரமெதுவுமில்லை என ஷெரிஃப் மேலும் கூறியுள்ளார்.
14 minute ago
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago
7 hours ago