Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டையில் தனிமைப்படுத்தல் காலமொன்றைத் தொடர்ந்து, காலியில் இரசிகர்களில்லாமல் அடுத்த மாதம் இரண்டு டெஸ்ட்களை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாடவுள்ளனர்.
இங்கிலாந்தின் மீள ஒழுங்கமைப்பட்ட இலங்கைச் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையானது இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக குறித்த சுற்றுப்பயணமானது இவ்வாண்டு மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானமொன்றின் மூலம் இலண்டனிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரவுள்ள இங்கிலாந்து, அங்கு அடுத்த மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை பயிற்சியில் ஈடுபட முடியும்.
முதலாவது டெஸ்ட்டானது அடுத்த மாதம் 14ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையும், இரண்டாவது டெஸ்ட்டானது அடுத்த மாதம் 22ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.
27 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
3 hours ago