2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணத்தைக் கைப்பற்றிய பரிஸ் ஸா ஜெர்மைன்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில் சம்பியன்ஸ் லீக் தொடரின் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இத்தாலியில் வியாழக்கிழமை (14) அதிகாலை நடைபெற்ற யூரோப்பா லீக் தொடரின் சம்பியன்களான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் பெனால்டியில் வென்றே பரிஸ் ஸா ஜெர்மைன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இப்போட்டி வழமையான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக லீ கங்-இன், கொன்கலோ றாமோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் சார்பாக மிக்கி வான் டு வென், கிறிஸ்டியன் றொமெரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

பெனால்டியில் பரிஸ் ஸா ஜெர்மைனின் வித்தின்ஹா தனதுதையை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்திய நிலையில், கொன்கலோ றாமோஸ், உஸ்மன் டெம்பிலி, லீ கங்-இன், நுனோ மென்டிஸ் ஆகியோர் தமதுதைகளை உட்செலுத்தியருந்தனர். டொட்டென்ஹாமின் டொமினிக் சொலங்கே, றொட்றிகோ பென்டாக்கூர், பெட்ரோ பொரேரோ ஆகியோர் தமதுதைகளை உட்செலுத்தியிருந்த நிலையில், மிக்கி வான் டு வென்னின் உதையை பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளர் லூகாஸ் செவலியர் தடுத்திருந்ததுடன், மத்தியிஸ் டெல் தனதுதையை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்த 4-3 என்ற ரீதியில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .