2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சீருடை

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எல்.எஸ். டீன்

அக்கரைப்பற்று றோயல் கிங் விளையாட்டு கழக (ஆர்.கே.எஸ்) கிரிக்கெட் அணி  வீரர்களுக்கு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வானது, கழகத்தின் அலுவலகத்தில், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் எம்.எம்.றுக்சான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், அக்கரைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி சமீலுல் இலாஹி, விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.இம்று பஸ்கான், அக்கரைப்பற்று-16 கிராம சேவை உத்தியோகத்தர் லிதர்சன், கழகத்தின் ஆலோசகர் கலாபூசணம் நூர்தீன், ஐகொனிக் யூத்ஸ் அமைப்பின் தலைவரும், இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதித் தலைவருமான யூ.எல். தில்ஷான், அமைப்பின் ஆலோசகர் எம்.எஸ்.எம். றிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டு கழக உறுப்பினர்களுக்கு புதிய சீருடைகளை வழங்கி வைத்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .