Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மே 20 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய வீரர் ஒப்பந்தத்தில் மிகவும் கூடிய ஊதிய பிரிவில் தனஞ்சய டி சில்வாவும், நிரோஷன் டிக்வெல்லவும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஒப்பந்தத்தில் வீரர்களின் அடிப்படைச் சம்பளங்களில் குறிப்பிடத்தக்களவு குறைக்கப்பட்டுள்ளது. எனினும், பெறுபேறு ரீதியிலான ஊதிய உயர்வுகளை அதிகமாக வீரர்கள் பெறவுள்ளனர்.
இதேவேளை, ஒப்பந்த வீரர்கள் எண்ணிக்கையும் 32-இலிருந்து 24ஆகக் குறைவடைந்துள்ளது.
குறித்த ஒப்பந்தத்ததில் வீரர்கள் இன்னும் கைச்சாத்திடவில்லையென்பதுடன், மேம்பட்ட அடிப்படை ஊதியங்கள் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபையுடன் பேரம்பேசுவதாக அறியப்படுகிறது.
முன்னாள் அணித்தலைவரான அஞ்சலோ மத்தியூஸுக்கு 80,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ($) ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது கடந்த ஒப்பந்தத்தை விட $50,000 குறைவாகும். டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் ஒப்பந்தமானது $100,000-இலிருந்து $70,000 ஆகக் குறைவடைந்துள்ளது. சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மாலின் ஒப்பந்தமானது $100,000 -இலிருந்து $65,000 ஆகக் குறைவடைந்துள்ளது.
இந்நிலையில், முதலாமிடத்தில் தரப்படுத்தப்பட்ட அணிக்கெதிரான தொடர் வெற்றிக்கு $150,000, இரண்டாமிட தரப்படுத்தல் அணிக்கெதிரான தொடர் வெற்றிக்கு $125,000, மூன்றாமிட தரப்படுத்தல் அணிக்கெதிரான வெற்றிக்கு $100,000, நான்காமிட தரப்படுத்தல் அணிக்கெதிரான தொடர் வெற்றிக்கு $80,000-உம், ஏழாமிடத்தில் தரப்படுத்தப்பட்ட அணிக்கெதிரான வெற்றிக்கு $30,000-உம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, டெஸ்ட் போட்டியொன்றுக்கு $7500 வழங்கப்படவுள்ளது.
புதிதாக பதும் நிஸங்க, அஷேன் பண்டார, ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் புதிதாக ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத் திட்டம்
ஏ1 பிரிவு ($100,000 அடிப்படை ஊதியம்) – தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல
ஏ2 ($80,000) – அஞ்சலோ மத்தியூஸ்
ஏ3 ($70,000) – திமுத் கருணாரத்ன, குசல் மென்டிஸ்
பி1 ($65,000) – தசுன் ஷானக, சுரங்க லக்மால்
பி2 ($60,000) – லசித் எம்புல்தெனிய, வனிடு ஹஸரங்க
பி 3 ($55,000) – லஹிரு திரிமான்ன, பதும் நிஸங்க
சி 1 ($50,000) – கசுன் ராஜித, டுஷ்மந்த சமீர
சி 2 ($45,000) – தினேஷ் சந்திமால், லக்ஷன் சந்தகான்
சி 3 ($40,000) – இசுரு உதான, விஷ்வ பெர்ணான்டோ
டி 1 ($35,000) – ஒஷாத பெர்ணான்டோ, ரமேஷ் மென்டிஸ்
டி 2 ($30,000) – தனுஷ்க குணதிலக, லஹிரு குமார
டி 3 ($25,000) – அகில தனஞ்சய, அஷேன் பண்டார
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago