2025 மே 19, திங்கட்கிழமை

குரோஷியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது.

இன்று அதிகாலை நடைபெற்ற குரோஷியாவுடனான அரையிறுதிப் போட்டியில் வென்றே ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது.

குரோஷியாவின் கோல் காப்பாளர் டொமினிக் லிவகோவிச்சால் ஆர்ஜென்டீனாவின் முன்களவீரர் ஜூலியன் அல்வரேஸ் வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை போட்டியின் 34ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவின் அணித்தலைவர் லியனல் மெஸ்ஸி கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது.

இதற்கடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவின் முன்களவீரரான மெஸ்ஸி வழங்கிய பந்தை பெற்றுக் கொண்டு தனித்து 50 மீற்றர் முன்னேறிய அல்வரேஸ் பெற்ற கோல் மூலம் முன்னிலையை ஆர்ஜென்டீனா இரட்டிப்பாக்கியது.

இந்நிலையில் முதற்பாதி முடிவில் ஆர்ஜென்டீனாவின் மத்தியகளவீரர் அலெக்ஸிஸ் மல் அலிஸ்டர் தலையால் முட்டிய பந்தை லிவகோவிச் தடுத்திருந்த நிலையில் முதற்பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா முன்னிலையிலிருந்தது.

பின்னர் குரோஷியாவின் பின்களவீரர் ஜொஸ்கோ கவிராலைத் தாண்டு அல்வரேஸிடம் மெஸ்ஸி கொடுத்த பந்தை அவர் கோலாக்க, 69ஆவது நிமிடத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற ஆர்ஜென்டீனா, போட்டி முடிவிலும் இக்கணக்கோடு வெற்றி பெற்றது.

பிரேஸினுடனான காலிறுதிப் போட்டி போன்று பெரும்பாலான நேரங்களில் குரோஷியாவே பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும், ஒரே ஒரு உதையை மாத்திரமே கோல் கம்பத்தை நோக்கி குரோஷியா செலுத்தியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X