Shanmugan Murugavel / 2025 மார்ச் 10 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், கெட்டாஃபேயின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்டர் சொர்லொத் பெற்றதோடு, கெட்டாஃபே சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மெளரோ அரம்பரி பெற்றிருந்தார்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் தலா 57 புள்ளிகளை பார்சிலோனாவும், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டும் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகளின்படி முதலாமிடத்தில் பார்சிலோனாவும், இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும் காணப்படுகின்றன. 56 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும், 49 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிக் பில்பாவோவும் காணப்படுகின்றன. இதில் பார்சிலோனா மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
25 minute ago
29 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
33 minute ago